ஆளுநரின் செயற்பாட்டால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான சேவைகள்

வடக்கில் உள்ள சில திணைக்களங்களில்   பணியாற்றுகின்ற  தென்பகுதி உத்தியோகத்தர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு விடுவிக்குமாறு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  அழுத்தம்  பிரேயோகித்து வருவதாவும், மாற்றீடு எதுவுமின்றி இவ்வாறு உத்தியோகத்தர்களை விடுவிப்பதனால் திணைக்களங்களை நடத்துவது கடினமாக உள்ளது என சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தென்பகுதியிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்று வந்திருக்கும் அரச அலுவலர்களை, அவர்களுக்குப் பதிலாக எவரும் நியமிக்கப்படாமலே அவர்களது சொந்த இடங்களுக்கு விடுவிக்குமாறு ஆளுனர் உத்தரவிடுகிறார் எனவும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கருத்திலெடுக்காது ஆளுனர் பிறப்பிக்கும் இடமாற்ற உத்தரவுகளால் வடக்கில் உள்ள நிலை திணைக்களங்களில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து வடக்கில் பணியாற்றும் தென்பகுதியினர் அனேகர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று மாற்றலாகிச் செல்லும் முனைப்பில் இறங்கியுள்ளதாகவும் இதனால் வடக்கில் அரச திணைக்களங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கும் வைத்தியசாலைகள் உள்ளிட்டவை செயற்பாடுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை  உணவு கையாளும் நிலையங்களைப் பரிசோதிப்பதற்கு சட்டரீதியான நடைமுறைகள் உள்ள நிலையில் , சுகாதார வைத்திய அதிகாரிகளது அனுமதி இன்றி அவர்களது பிரதேசங்களில் சட்ட வலுவற்றவர்களை ஆளுனர் இவ்வாறான பரிசோதனைகளில் ஈடுபடுத்துவதை வடக்கின் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆட்சேபித்துள்ளனர்.
ஆளுனர் உரிய துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசிக்காது தமது தனிச் செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியவர்களது ஆலோசனையின் பேரில் முடிவுகளை எடுப்பதாலேயே இவ்வாறான குழப்பநிலை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 52
Share:

Author: theneeweb