இரண்டு வருடங்களை கடந்தும் திறக்கப்படாதுள்ள கிசோ சனசமூக நிலையம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செலயக பிரிவில் உள்ள பாரதிபுரம் கிசோ சனசமூக நிலையம் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவுற்று இரண்டு வருடங்களை கடந்த போதும் திறக்கப்படவில்லை என  சனசமூக நிலையத்தின் தலைவர் செ சந்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கீழ் உள்ள தேசிய நல்லிணக்கத்திற்கா செயலகத்தின் சுமார்  மூன்று மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சகசமூக நிலையக் கட்டடம் மற்றும் வாசிகசாலை என்பனவே திறக்கப்படாதுள்ளது.
இது  தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திடம் சனசமூக நிலையத்தினர் வினவிய போது தாங்கள் கரைச்சி பிரதேச சபையிடம் கையளித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையினரிடம் சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் வினவியபோது  சனசமூக நிலைய நிர்வாகம் தங்களுக்கு எதிரான அரசியல் தரப்பு ஒன்றின் ஆதரவாளர்கள் எனவும் எனவே நீங்கள்  நிர்வாகத்தில் இருந்து விலகுங்கள் நாங்கள் திறக்கின்றோம் என கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பு பதிலளித்துள்ளது.
எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி  சனசமூக நிலையக் கட்டடத்தை  மக்களின் பயன்பாட்டிற்கு  கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  கிசோ சனசமூக நிலையத்தினர்  கோரியுள்ளனர். 52

 

Share:

Author: theneeweb