மனோ கணேசனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட நகர சபை உறுப்பினர்

தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வள பகிர்வாளர்களாக மொழி பயற்றுவிப்பாளர்களை நியமிக்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று (05) முன்னேடுக்கப்பட்ட சந்தர்பத்தில் மஹரகம நகர சபை உறுப்பினர் ஒருவர் அமைச்சர் மனோ கணேசனின் செயற்பாடுகளுக்கு எதிராக வாய்தர்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த செயன்முறை தேர்தல் சட்டங்களுக்கு எதிரானது என தெரிவித்தே அவர் தனது எதிர்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வள பகிர்வாளர்களாக 1200 மொழி பயிற்சியாளர்களை நியமிக்கும் நிகழ்வு இன்று கோட்டாவையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

அந்த சந்தர்பத்தில் குறித்த இடத்திற்கு வருகைதந்த மஹரகம நகர சபையின் உறுப்பினர் ஒருவர் இந்த இந்த செயன்முறை தேர்தல் சட்டங்களுக்கு எதிரானது என தெரிவித்து எதிர்ப்பை வெளியிட்டார்.

அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் அங்கு வருகைதந்து தேர்தல் முடிவடையும் வரை குறித்த நடவடிக்கைகளை பிற்போடுமாறு அமைச்சர் மனோ கணேசனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Share:

Author: theneeweb