ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலசுக ஒருபோதும் ஐதேக விற்கு ஆதரவளிக்காது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த மாநாடு இன்று (05) மாலை எல்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா, சஜித் பிரேமதாசவின் உடைக்குள் ஒழிந்து கொண்டிருப்பர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என கூறினார்.

ஜனாதிபதியின் கருத்துக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவித கொடுக்கல்வாங்கல்களிலும் ஈடுபடாது என அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய சுதந்திரக் கூட்டமைபின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டார்.

இதேவேளை கட்சி அதேபோல் கட்சியின் அங்கத்தவர்களை கருத்திற்கொண்டே நாட்டின் எதிர்காலம் தொடர்பான தீர்மானத்தை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற நபராக அரசாங்கத்தின் பதவி காலத்தை நிறைவு செய்து வெளியேறுவதாக கூறினார்.

ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னேடுக்க தான் தீர்மானித்திருந்த போதிலும் அதற்காக பல போராட்டங்களை நடத்த வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களின் விருப்பத்தையும், ஏழ்மையையும் புரிந்துக்கொள்ளாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் கேட்டுக்கொண்டார்.

Share:

Author: theneeweb