லண்டனில் கைதான மூன்று இலங்கையர்களும் தொடர்ந்து காவல் நிலையத்தில்

லண்டன் – லூட்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் தெற்கு லண்டன் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மெற்ரோ பொலிட்டன் காவற்துறை இணையத்தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் கைதாகினர்.

கைதானவர்களில் ஒரு பெண் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 3 பேரும் தெற்கு லண்டன் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மெற்ரோ பொலிட்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb