17ல் தே.மு.தி.க., தலைவர் , விஜயகாந்துக்கு சிறுநீரகச்சிகிச்சை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, வரும், 17ல், ‘கிட்னி’ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு, முதலில், சிங்கப்பூர் மருத்துவமனையிலும், பின்னர், அமெரிக்கா மருத்துவனையிலும், சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையிலும், தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக, மனைவி பிரேமலதாவுடன், அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, விஜயகாந்திற்கு, ‘கிட்னி’ மாற்று அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவெடுத்துள்ளனர். கிட்னி தானம் செய்ய முன்வந்தவரும், அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்குள், விஜயகாந்திற்கு ஆப்பரேஷன் செய்ய, முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகை வருவதால், அறுவை சிகிச்சை தேதி, வரும், 17க்கு மாற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு, விஜயகாந்தின் உடல் நிலையையும், மன நிலையையும் தயார்படுத்தும் வகையில், பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு, அவரை அழைத்து சென்று வருகிறார், பிரேமலதா. இதுகுறித்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

Share:

Author: theneeweb