நாட்டின் மதுசாரம் சார்ந்த கொள்கைகளை நிதியமைச்சு, தனது விருப்பத்திற்கு மாற்றியமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது.

04.10.2019
ஊடக செய்தி
நாட்டின் மதுசாரம் சார்ந்த கொள்கைகளை நிதியமைச்சு, தனது விருப்பத்திற்கு மாற்றியமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மதுசாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பின்வருமாறு, – கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பியர் நிறுவனத்திற்கு வரி சலுகை வழங்கப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வரித்தொகை இழக்கப்பட்டது

– 2017ம் ஆண்டு இறுதியில் பியரிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மது வரித்தொகையினை குறைத்தமையினால், ஒரு பியர் போத்தலில் ரூபா 76.4 நட்டம் ஏற்பட்டது. இதனடிப்படையில் 2018ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டிருந்த மொத்த பியர்
போத்தல்களினால் ரூபா 22″920″000 (ரூபா 23 மில்லியன்கள்) அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய தொகை இழக்கப்பட்டது.

– 2019ம் ஆண்டிற்கான பாதீட்டில் பியரிற்கு குறைந்தளவில், குறைந்த பெறுமதியில் விதிக்கப்பட்ட வரியினால் அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய பாரிய பணத்தொகை
இழக்கப்பட்டது. ஆனால் அதன் நன்மைகளை இலாபமாக பியர் நிறுவனம் பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவை இவ்வாறிருக்க, கடந்த 2ம் திகதி (02.10.2019) அன்று மதுசாரம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது கொள்வனவு செய்யக் கூடிய மதுசாரத்தின் அளவு
லீற்றர் 7.5 தொடக்கம் லீற்றர் 80 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது (அண்ணளவாக 10 போத்தல் தொடக்கம் 80 போத்தல் வரை ஒருவர் கொள்வனவு செய்ய முடியும்) மேற்குறிப்பிட்ட தீர்மானங்களும் கொள்கைகளும் பொது மக்களால் கோரப்பட்டவை அல்ல, அதுமட்டுமின்றி நாட்டில் காணப்படும் பாரிய பிரச்சினைக்கான தீர்வுகளும் அல்ல. மாறாக
மதுசார உற்பத்தி நிறுவனங்களிற்கு இலாபம் ஈட்டிக்கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்திற்கு
நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களே ஆகும். (2015 ம் ஆண்டில் மாத்திரம் மதுசாரப் பாவனையினால் ஏற்பட்ட சுகாதார பாதிப்புக்களிற்கான செலவீனம் சுமார் ரூபா 120 பில்லியன்களாகும்) எமது நாட்டில் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களின் மதுசார பாவனை 35மூ வீதம்
மாத்திரமே ஆகும். அதற்கமைய அதிகளவானோர் மதுசாரம் அருந்தாதவர்கள் எமது நாட்டில் வசிக்கின்றனர். எமது நாடு மதுசார கலாசாரம் உள்ள நாடல்ல. இவ்வகையான தீர்மானங்கள் மதுசார பாவனையை அதிகரிப்பதற்கும், மதுசார கலாசாரத்தை நாட்டிற்குள் ஊடுறுவச் செய்யும்
வகையில் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. இது தேசிய மற்றும் சர்வதேச மதுசார நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புக்களை மாத்திரம் நிறைவேற்றும் தீர்மானமே ஆகும்.

#
உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணிப்பின் படி இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 8ஃ10 மரணங்கள் (10 இல் 08 இறப்புக்கள்) தொற்றா
நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்றா நோய்களிற்கான பிரதான முதற் காரணியாக
புகைத்தல் பாவனை காணப்படுவதோடு இரண்டாவது பிரதான காரணியாக மதுசார பாவனை காணப்படுகின்றது. நாளொன்றிற்கு மதுசார பாவனையினால் சுமார் 40 பேர் மரணத்தைத்
தழுவுகின்றனர். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளிற்கு காரணமாக அமையும் மதுசாரம் சார்ந்த
தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, இவற்றின் உண்மை நிலவரத்தை நன்கு அறிந்த சுகாதார
அமைச்சு உட்பட மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (Nயுவுயு) ஆகியவற்றின் எந்தவிதத் தலையீடுமின்றி தன்னிச்சையாக நிதியமைச்சிற்கு மாத்திரம் அநுகூலம் பயக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுப்பதானது கவலைக்குரிய விடயமே. ஆகவே ஜனநாயகத்திற்குப் புறம்பான, மதுசார உற்பத்தி நிறுவனங்களுக்கு நன்மை
பயக்கும் வகையில் மாத்திரம் சிந்தித்து எடுக்கப்பட்ட “மதுசாரம் கொள்வனவு வீதம்” தொடர்பான தீர்மானம் அமுல்படுத்துவதைத் தடுப்பதற்கு, அனைத்து சமயத் தலைவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வல்லுணர்கள்
உட்பட அனைத்து பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கேட்டுக்கொள்கின்றது.

புபுது சுமனசேகர
நிறைவேற்று பணிப்பாளர்

Share:

Author: theneeweb