வீதி விபத்துக்களை தடுப்போம் விழிப்புணர்வு பேரணி

வீதி விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று காலை விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

காலை எட்டு முப்பது மணி அளவில் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணியானது கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையை சென்றடைந்தது
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களின்அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்கள் ஊழியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

Author: theneeweb