ஹெரோயின் கடத்தல்காரருக்கு மரண தண்டனை

ஹேரோயின் போதைப்பொருளை கடத்திய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு, மாளிகாகந்த பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் முஷாஹீர் கடாஃபி என்ற 5 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 43.44 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபர் மாளிகாகந்த பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீண்ட வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் தீர்ப்பினை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு பிரதிவாதியை குற்றவாளியாக அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்த மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb