வெளிநாட்டவர் ஒருவர் தற்கொலை..

கொழும்பு – கொம்பனித்தெரு – யூனியன் பிரதேசத்தில் உள்ள விருந்தகம் ஒன்றின் 33 ஆவது தளத்தில் இருந்து கீழே வீழ்ந்து வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.

52 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர், குறித்த நபர் தனது நண்பர் ஒருவருடன் அந்த விருந்தகத்தில் தங்கியிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு நண்பர் இல்லாத சந்தர்ப்பத்தில், தான் தங்கியிருந்த அறையிலிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளரன் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொம்பனித்தெரு காவல்துறையினர் அவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb