தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்- மலேசிய காவல்துறை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியாவில் இருந்து மீளுருவாக்குவதற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படும் முயற்சி குறித்த தீவிர விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று அந்த நாட்டின் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

மலேசிய காவற்துறையின், பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரிபின் தலைவர் புக்கிட் அமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சிகளை மலேசியாவில் நடத்தவும் அந்த அமைப்பை மீளுருவாக்கவும், பெருந்தொகையான பணப்பறிமாற்றங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்அடிப்படையில் இதுவரையில் 2 அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் கடந்த 10ம் மற்றும் 12ம் திகதிகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பல பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதுடன், சர்வதேச ரீதியான பணப்பறிமாற்றங்கள் குறித்த விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author: theneeweb