முருகபூபதியின் “இலங்கையில்பாரதி “

ஈழத்துஇலக்கியச்சிற்றிதழ்களில்பாரதியின்தாக்கம்எத்தகையது…?

கைலாசபதி – கணேசலிங்கன்முரண்பாடுகளையும்பேசும்நூல்

( கொழும்புதமிழ்ச்சங்கம்விநோதன்மண்டபத்தில்ஞானம்ஆசிரியர்தி. ஞானசேகரன்சமர்ப்பித்தமதிப்பீட்டுரை)

( நேற்றையதொடர்ச்சி )

 

முருகபூபதியின்இந்தஆய்வுநூலின்தலைப்புபற்றியும்கூறவேண்டும்.

நான்முன்னர்குறிப்பிட்டநூல்களின்வரிசையில்  ,ஈழம்வருகிறான்பாரதிஎன்றநூலைதாழைசெல்வநாயகம்எழுதியதாகக்குறிப்பிட்டேன்.    முருகபூபதிஇலங்கையில்பாரதிஎனக்குறிப்பிடுகிறார்.   ஈழம்,   இலங்கைஎனஇரண்டுவேறுபட்டசொற்களால்தலைப்பிடப்பட்டதைப்பார்க்கிறோம்.

ஈழம்என்பதேமுதலில்தோன்றியசொல்லாகஇருக்கவேண்டும். சங்கஇலக்கியத்திலேஈழத்துபூதந்தேவனாரைப்பார்க்கிறோம்.  முதற்சங்கஇலக்கியங்களில்ஒன்றானபட்டினப்பாலையில், ஈழத்துணவும்காழகத்தாக்கமும்என்றுகுறிப்பிடப்பட்டுள்து. சிலப்பதிகாரத்திலேதான்முதன்முதலில்இலங்கைஎன்றசொல்வருவதைக்காண்கிறோம் .  கடல்சூழ்இலங்கைக்கயவாகுமன்னனைப்பார்க்கிறோம்.    எனவேஇரண்டுசொற்பிரயோகங்களும்சரியானதுதான். ஆனால், ஈழம்என்றசொல்லேபழமையானது. கிறிஸ்துவுக்குமுற்பட்டது.ஈழப்போர்இலங்கையில்ஏற்பட்டபின்னர்ஈழம்என்றசொல்லைபாவிப்பதற்குஒருமனத்தடையைபலரும்வகுத்துக்கொண்டார்கள்.

இனி,   இந்தநூலில்சொல்லப்படும்சிற்றிதழ்களில்பாரதியின்தாக்கம்பற்றிப்பார்க்கலாம்.   1946ஜனவரியில்வெளியானபாரதிஇதழ்தமிழ்மொழிக்குப்புதுமைப்போக்களித்தபாரதியின்பெயர்தாங்கிவந்தது. இதன்ஆசிரியர்களாககே. கணேஷ்,  கே.ராமநாதன்ஆகியேர்விளங்கினர். இலங்கையின்முதன்முதலில்வெளிவந்தசிற்றிதழ்பாரதியின்பெயரைத்தாங்கிவந்ததுகவனத்துக்குஉரியது.

அதேபோன்றுகிழக்குஇலங்கையில்இருந்தும்பாரதிஎன்றபெயரில்ஒருசிற்றிதழ்வெளியாகியுள்ளது. 1948இல்வெளிவரத்தொடங்கியஇதழ்,  36இதழ்களுடன்தனதுபயணத்தைமுடித்துக்கொண்டது. பண்டிதர்ம.நாகலிங்கம், கு. தட்சணாமூர்த்தி, த.சபரத்தினம்ஆகியோர்இதன்கூட்டாசிரியர்களாகஇருந்துள்ளனர்.

கிழக்குஇலங்கையில்இருந்துதாரகைஎன்னும்இதழ்வெளியானது. பாரதிநூற்றாண்டுகாலத்தில்தாரகைசிறப்பிதழ்வெளியிட்டுள்ளது.

1971முதல்வெளிவந்தகுமரன்இதழுக்குசெ. கணேசலிங்கன்ஆசிரியராகஇருந்தார். கைலாசபதியின்பாரதிதொடர்பானபார்வைக்கும்கணேசலிங்கனின்பார்வைக்கும்மார்க்சியவெளிச்சத்திலேயேவேறுபாடுகள்இருந்தன. அதன்எதிரொலியைகுமரன்இதழ்களிலும்பார்க்கமுடிந்தது. குமரன்  60இதழ்களுடன்தனதுபயணத்தைமுடித்துக்கொண்டது. குமரன்இதழில்வெளியானஆய்வுகள்பாரதியைக்கேள்விக்குஉட்படுத்தின. மறுவாசிப்புச்செய்யத்தூண்டினஎன்பதையும்முருகபூபதிஇந்நூலில்பதிவுசெய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்இயங்கியதேசியகலைஇலக்கியப்பேரவையினால்வெளியிடப்பட்டசிற்றேடுதாயகம்.இதன்ஆசிரியர் க. தணிகாசலம். 1983 ஏப்ரல்இதழில்இருந்துதொடர்ச்சியாகபாரதிபற்றியஆய்வரங்குக்கட்டுரைகள்இதில்வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகள்தொகுக்கப்பட்டு 1984ஆம்ஆண்டில்“ பாரதிபன்முகப்பார்வை  “என்றபெயரில்வெளிவந்தது.

1975ஆம்ஆண்டுஉருவானஅலைஇலக்கியவட்டத்தின்காலாண்டுஇதழ்அலை.ஆசிரியர்குழுவிலும்இடம்பெற்றுஅதன்நிருவாகஆசிரியராகவும்இருந்தவர்அ. யேசுராசா.பாரதிபற்றியஉண்மைகளைத்தெரிவிப்பதிலும்பாரதியைஇனங்காணமுயல்வோரைஇனம்காண்பதிலும்அலைதீவிரம்காண்பித்தது.

அலையின் 22ஆவது இதழ்பீக்கிங்சார்புபத்திரிகையானசெம்பதாகை 11 ஆவதுஇதழில்பதிவுசெய்திருந்தகட்டுரைஒன்றைதேவைகருதிமறுபிரசுரம்செய்தது. அக்கட்டுரையின்தலைப்பு ‘பாரதிபற்றியசிலமதிப்பீடுகள்”என்பதாகும். பாரதிபற்றிகற்கமுனைபவர்கள்பாரதிமீதுசுமத்தப்படும்குற்றச்சாட்டுக்கள்சரியானவையா? பிழையானவையா?  என்பதைஅறியமுனைபவர்கள்அவசியம்படிக்கவேண்டியகட்டுரைஇதுஎன்றகுறிப்பும்முருகபூபதியின்நூலில்காணப்படுகிறது.

 

2007 ஓகஸ்ட்மாதம்முதல்ஜீவநதிகலைஇலக்கியஇதழ், அல்வாயில்இருந்துவெளிவரத்தொடங்கியது. இதன்ஆசிரியர்கலாமணிபரணிதரன். ஜீவநதியும்பாரதிதொடர்பானஆய்வுகளுக்குக்களம்வழங்கியிருக்கிறது.   கிழக்குப்பல்கலைக்கழகத்தின்மொழித்துறைப்பேராசிரியைஅம்மன்கிளிமுருகதாஸ்பாரதியைஇதில்விரிவாகஆய்வுசெய்துஎழுதியிருக்கிறார். 1950 வரையானகாலகட்டத்துநவீனதமிழ்க்கவிதை|என்னும்ஆய்வுகுறிப்பிடத்தக்கது. பாரதிதன்னால்இயற்றப்பட்டகவிதைகளால்தமிழுக்குபுதியவளம்சேர்ந்ததெனஅவர்கூறியுள்ளர்.  இவ்வாறுபாரதியைப்போன்றுஈழத்திலும்கவிஞர்கள்தன்னம்பிக்கையுடன்எழுதவேண்டும்என்பதேஅம்மன்கிளிமுருகதாஸின்எண்ணம்என்பதையும்ஜீவநதியில்வெளியானஆக்கம்கூறிநிற்கின்றது.

 

பாரதியின்கவிதைவரிகளைதாரகமந்திரமாகக்கொண்டும்சிலஇதழ்கள்இலங்கையில்வெளிவந்துள்ளன.

 

“  ஆடுதல்பாடுதல்சித்திரம்கவி

யாதியினையகலைகளில்உள்ளம்

ஈடுபட்டென்றும்நடப்பவர்பிறர்

ஈனநிலைகண்டுதுள்ளுவார்.  “

என்றவரிகளைத்தாங்கிவந்தமல்லிகைஇதழின்ஆசிரியர்டொமினிக்ஜீவா,   1966 ஆண்டிலிருந்துநீண்டகாலம்அதனைவெளியிட்டு,  சாதனைபடைத்தவர்.  1966முதல்மல்லிகையில்பாரதியியல்ஆக்கங்கள்ஏராளமாகவெளிவந்துள்ளன. இலங்கைப்படைப்பாளிகள்மட்டுமல்ல,   தமிழகத்தவர்களும்அடிக்கடிபாரதிபற்றிமல்லிகையில்எழுதியுள்ளார்கள். சிறுசஞ்சிகைகளில்பாரதிஆய்வு|என்றகட்டுரையைமல்லிகையில்பேராசிரியர்கைலாசபதி, பாரதிநூற்றாண்டுகாலத்தில்எழுதியிருந்தார்.     பேராசிரியர்கைலாசபதி,  மல்லிகையில்எழுதியஇலங்கைகண்டபாரதிஎன்றகட்டுரையைதமிழ்நாட்டின்தாமரைஇதழ்மறுபிரசுரம்செய்தது.

மல்லிகைஆசிரியர்டொமினிக்ஜீவா, ப. ஜீவானந்தத்தின்கொள்கைகளால்ஆகர்ஷிக்கப்பட்டுடொமினிக்என்றதனதுபெயருடன்ஜீவாஎன்றபெயரையும்இணைத்துக்கொண்டவர்இந்தப.ஜீவானந்தம்பாரதியில்தோய்ந்தவர். பாரதியைப்பரப்பியவர்.அவரதுஉரைமற்றும்கட்டுரைகள்‘பாரதிவழி’ என்றநூலாகவெளிவந்தது. 1958ஆம்ஆண்டில்பாரதிதினத்தையொட்டி‘ஜனசக்தி’யில்ஜீவாஎழுதியஏழுகட்டுரைகள்இடம்பெற்றுள்ளன.

‘பாரதியின்தத்துவஞானம்’ என்றதலைப்பைக்கொண்டஇந்தக்கட்டுரைத்தொகுதியில்பாரதியின்பன்முகப்பரிமாணங்களைச்சுட்டிக்காட்டுகிறார். 1950 களில்இந்தியாவில்கம்யூனிஸ்ட்கட்சிதடைசெய்யப்பட்டபோது, ப. ஜீவானந்தம்இலங்கையில்தலைமறைவாகவாழ்ந்தார். இலங்கையில்கண்டியில்கே. கணேஷ்அவர்களதுஇல்லத்தில்தங்கியிருந்தவர்.அக்காலகட்டத்தில்மலையகத்திலும்பலகூட்டங்களில்கலந்துகொண்டவர்.     அதன்பின்னர்யாழ்ப்பாணத்தில்தங்கியிருந்தகாலத்திலும்பலகூட்டங்களில்கலந்துகொண்டவர்.   பாரதியின்கருத்துக்களைப்பரப்பியவர்.

“  வெள்ளத்தின்பெருக்கைப்போல்

கலைப்பெருக்கும்கவிப்பெருக்கும்மேவுமாயின்

பள்ளத்தில்வீழ்ந்திருக்கும்குருடரெல்லாம்

விழிபெற்றுப்பதவிகொள்வர்”

என்றபாரதியின்தாரகமந்திரத்துடன் 2000 ஆண்டுவெளிவரத்தொடங்கியதுஞானம்கலைஇலக்கியஇதழ். ஞானம்இதழ்பாரதிஆய்வுகளுக்குச்சிறந்தகளம்அமைத்துக்கொடுத்திருக்கிறது.  பாலகிருஷ்ணன்சிவாகரன், பாரதியின்கவிதைகளில்பல்கோணப்பார்வைஎன்றஆய்வுக்கட்டுரையைஎழுதியுள்ளார். பாரதியார்எழுதியமுதற்கவிதை ,பாரதியார்எழுதியமுதற்சிறுகதைஎன்பவற்றைஞானத்தில்பதிவுசெய்தவர்செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன். பாரதியார்1905 இல்சக்கரவர்த்தனிஇதழில்எழுதியதுளசிபாய்என்றசிறுகதையேதமிழின்முதற்சிறுகதை. வ.வே.சு. ஐயர்எழுதியகுளத்தங்கரைஅரசமரம்அல்லஎனஅவர்நிறுவுகிறார்.

தனிமையிரக்கம்என்றகவிதையேபாரதியார்எழுதியமுதற்கவிதை. இது1904ஆம்ஆண்டில்விவேகபானுஇதழில்வெளியானது.  அச்சுவாகனம்ஏறியமுதற்கவிதைஅதுதான்என்றபோதிலும்,  எட்டயபுரசமஸ்தானமன்னருக்குபாரதிதனதுபடிப்புக்குஉதவிகேட்டுகவிதைவடிவில்எழுதியகடிதமேஅவர்எழுதியமுதற்கவிதை.அதனைப்பாரதியின்இளையசகோதரன்பாதுகாத்துவைத்திருந்தார். அந்தக்கவிதைஞானம்இதழில்முழுமையாகப்பிரசுரமாகியுள்ளது. இக்கவிதைதஞ்சைப்பல்கலைக்கழகத்தில்வெளியிடப்பட்டஆய்வுப்பதிப்பில்சேர்க்கப்பட்டதகவலையும்கோபாலகிருஷ்ணன்தந்துள்ளார். ஞானம்வெளியிட்டஈழத்துப்புலம்பெயர்தொகுப்பில்பாரதியின்தலைப்புக்கவிதைஅமைந்துள்ளது.   “ பற்பலதீவினும்பரவிஇவ்வெளியதமிழ்ச்சாதி   “  என்றுதொடங்கிஇறுதியில் “   பெருமையும்இன்பமும்பெறுவார்” எனஅக்கவிதைமுடிகிறது.

தமிழினம்குறித்துபாரதிக்குஇருந்ததீர்க்கதரிசனம்எத்தகையதுஎன்பதைசமகாலவாசகர்கள்தெரிந்துகொள்ளவேண்டும்என்பதற்காகஈழத்துப்புலம்பெயர்ந்தோர்இலக்கியத்தின்செல்நெறியையும்அதன்உள்ளடக்கத்தையும்ஆவணமாக்கும்பொருட்டுவெளியானகுறிப்பிட்டசிறப்புமலரில்,  அக்கவிதைவரிகள்இடம்பெற்றமைமிகவும்பொருத்தமானதேஎனக்குறிப்பிட்டுள்ளார்நூலாசிரியர். “  பாரதிஒருஜுவாலை  “ என்றதலைப்பில்ஜீவகாருண்யன்எழுதியகட்டுரைஅமைந்துள்ளது. சுப்பிமணியபாரதியின்பங்களிப்புபலபக்கங்களைக்கொண்டது. செய்யுள்வடிவைநாட்டார்பாடல்களுடன்இணைத்துஎளிமைப்படுத்தியமை,யமகம், திரிபு, மடக்குபோன்றயாப்பிலக்கணங்களிலிருந்துவிடுபட்டஇலகுகவிதைக்குவழிசமைத்தமை-   நவீனஉரைநடையின்சிறுகதை, நாவல், நடைச்சித்திரம், உருவகக்கட்டுரை, வசனகவிதைபோன்றவற்றின்முன்னோடிபாரதிஎனஇக்கட்டுரைநிறுவுகிறது.

இவைதவிரபாரதியின்ஞானகுருயாழ்ப்பாணத்துச்சுவாமியார்? என்றசர்ச்சையும்வெளியாகியுள்ளது. அந்தச்சுவாமியார்தனதுபரம்பரையில்வந்தவர்என்றும்அவர்தனதுபேரனார்என்றும்நிரூபிக்கும்வகையில்செங்கைஆழியான்வெளியிட்டநூல்தொடர்பாகவும்,ஞானம்ஆசிரியர்எதிர்வினைஆற்றியிருந்தார். அந்தஎதிர்வினைவிரிவாகஇந்நூலில்பதிவாகியுள்ளது.

இனிபாரதிசிறப்புமலர்கள்வெளியிட்டஇதழ்கள்எவையெனப்பார்ப்போம்

சுதந்திரன்அலுவலகத்திலிருந்துசுடர்என்றசிற்றிதழ்எட்டுவருடகாலம்வெளிவந்தது.   இது, 1982ஆம் ஆண்டுசித்திரைமாதம்பாரதிநூற்றாண்டுச்சிறப்பிதழைவெளியிட்டது. கோவைமகேசன்இதற்குஆசிரியராகஇருந்தார். 1977 இற்குப்பின்காசிஆனந்தன்சுடரின்ஆசிரியர்பொறுப்பைஏற்றார். அவரும் 1980ஆம் ஆண்டில்சுடர்பொறுப்பிலிருந்துவிலகினார்.   அதன்பின் 1981இல் கரிகாலன்ஆசிரியரானார்.   இச்சிறப்பிதழில்பாரதிதொடர்பானகட்டுரைகள், கவிதைகள்,சிறுகதைகள்வெளியாகியிருந்தன. இச்சிறப்பிதழின்சிறப்பானஅம்சம்என்றுகுறிப்பிடத்தக்கமூவர்முன்மொழிந்தகருத்துக்கள்என்றபத்திஇடம்பெற்றிருந்தது. குறமகள்வழங்கியநேர்காணல்பாரதியின்கருத்துக்களைஅடியொற்றியபெண்விடுதலைதொடர்பானசிந்தனையைவெளிப்படுத்தியிருந்தது.

சுடர்இதழ்பாரதிசிறப்புமலர்வெளியிட்டதுபோன்றுகலைச்செல்விஇதழும்பாரதிசிறப்பிதழைவெளிக்கொணர்ந்தது. அதுபற்றியதகவல்இந்தநூலில்இடம்பெறவில்லை.   இருப்பினும்முழுமைகருதிகலைச்செல்விபாரதிபற்றிஎடுத்தமுன்னெடுப்புகள்பற்றிஇங்குகுறிப்பிடுகிறேன். கலைச்செல்விதனதுமூன்றாவதுஇதழைபாரதிசிற்பிதழாகவெளிக்கொணர்ந்தது. இந்தஇதழ்பாரதிமலராக 1958 புரட்டாதிமாதத்தில்வெளிவந்தது. அட்டைப்படம்பாரதியின்உருவம்தாங்கிவெளியிடப்பட்டது. அந்தஇதழில் வ. அ. இராசரத்தினம், அ.செ. முருகானந்தன், நீர்வைபொன்னையன், டொமினிக்ஜீவாஆகியோர்எழுதியிருந்தனர். அழ. சிதம்பரம்அண்ணாமலைப்பல்கலைக்கழகஆராய்ச்சிமாணவர்,  பாரதிதொடர்பானகவிதையைஎழுதியிருந்தார்.   வங்கஎழுத்தாளர்கே. எஸ் .குப்தாஎழுதியசுதந்திரக்கொடிஎன்றசிறுகதையைதமிழில்நீர்வைபொன்னையன்தந்திருந்தார். அ. செ. முருகானந்தன்ஒருதடவைஎட்டயபுரத்துக்குச்சென்று, பாரதியின்மாமனார்முறையானசாம்பசிவஐயர்என்பவரைச்சந்தித்திருக்கிறார். “ பாரதியின்உள்ளத்தில்கனவுக்கும்உணர்ச்சிக்கும்தான்இடமிருந்தது. பசி, தாகம்போன்றஉடல்தேவைகளுக்குஇடமிருக்கவில்லை. அவனைச்சாப்பிடக்கூப்பிட்டால்இலகுவில்எழுந்திருக்கமாட்டான்.   அவன்சாப்பாட்டுக்குவழியில்லாமல்கிடந்தவன்என்பதெல்லாம்வீண்பேச்சு”என்றுசாம்பசிவஐயரும்அவருடையமனைவியும்சொன்னதையும்பாரதியாரின்புதுமைக்கருத்துகளின்படிவாழ்க்கையைநடத்துவதில்அவருடையசந்ததியினரிடையேசிலதயக்கங்கள்இருந்ததைதான்அவதானித்ததாயும்பாரதிக்குப்பின்என்றகட்டுரையில்குறிப்பிட்டுள்ளார்

கலைச்செல்விஏழாவதுஇதழில்பாரதிவகுத்தபாதையைக்காட்டுவதாககவிஞர்முருகையன்கவிதைஎழுதியிருந்தார்.

தமிழ்மாணவர்களின்பேச்சாற்றலைஊக்குவிக்கும்முகமாககலைச்செல்விபாரதிதினப்பேச்சுப்போட்டிஒன்றையும்நடத்தியது. வைத்தீஸ்வராவித்தியாலயத்தில்மூன்றுபிரிவுகளாகபோட்டிநடைபெற்றது.

யாழ்ப்பாணத்துதமிழ்எழுத்தாளர்சங்கம்நடத்தியபாரதிவிழாஒன்றிலேபாரதிவகுத்தபாதைஎன்றதலைப்பிலும், சாவகச்சேரிசிவன்கோயிலில்தேமதுரத்தமிழோசைஎன்றதலைப்பிலும்கவிஞர்முருகையன்பாடியகவியரங்கக்கவிதைகளைகலைச்செல்விஎட்டுப்பக்கங்களில்முழுமையாகவெளியிட்டது

1966கலைச்செல்விஇதழ்பாரதிகவிதைச்சிறப்பிதழாகவெளிவந்தது. அதில்அன்றைய 25 முன்னணிக்கவிஞர்களின்கவிதைகள்வெளிவந்திருந்தன. இப்படியாகஅதிகஅளவில்பாரதிதொடர்பானஆக்கங்களைவெளியிடுவதில்கலைச்செல்வியின்பங்கும்விதந்துகுறிப்பிடும்படியாகஇருந்தது.

அக்கினிக்குஞ்சுஎன்பதுபாரதியின்பாடல்வரி. இந்தப்பெயரில்யாழ்ப்பாணத்திலும்அவுஸ்திரேலியாவிலும்இரண்டுஇலக்கியஇதழ்கள்வெளியாகியுள்ளன.

மொத்தத்தில்இலங்கையில்பாரதிஎன்றஇந்தஆய்வுநூல், நல்லபலதகவல்களைத்தந்துள்ளது. முன்னர்வெளிவந்தபாரதிபற்றியநூல்களிலிருந்தும்வேறுபட்டுஒருபுதியகோணத்தில்பாரதிபற்றியஆய்வுகளைத்தந்துள்ளது. பத்திரிகைகள்,  நிறுவனங்கள்புத்திஜீவிகள்எப்படிஅணுகியிருக்கிறார்கள்?  என்பதைவெளிக்கொணர்வதாகஅமைந்துள்ளமைபாராட்டுக்குரியது.

Author: theneeweb