வடக்கு மாகாண புதிய ஆளுநர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தார்

புதிதாக நியமனம் பெற்ற வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு இன்று மாலை இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
வடக்கு மகாணத்திற்கு புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நேற்று நியமனக் கடிதத்தினை  பெற்றுக்கொண்ட பின்னர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்தது.
இந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துக் கொண்டிருந்தார்.
Share:

Author: theneeweb