கிழக்கு மாகாண சுகாதார துறையில் பணிப்பாளர்கள் நியமனம் இரத்து

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அக்கரைப்பற்று  வைத்தியசாலைப் பணிப்பாளர்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக  அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ .சுகுணன்  அவர்களும்அக்கரைப்பத்து வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி.ஐ. எம் . ஜவாஹீர் அவர்களும்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.ஷகீலா இஸடீன் அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர்  பைசல் காசிம் அவர்களின்  அழுத்தத்தின் பெயரில் நியமனம் வழங்கப்பட்டு இன்று(16) பதவியேற்று இருந்தனர். 

எனினும் இந்த நியமங்கள்  சுகாதார பிரதி அமைச்சர்  பைசல் காசிம் அவர்களின்  தொடர் அழுத்தத்தின் பெயரில்   வழங்கப்பட்ட  நியமங்கள் என அரச மருத்துவர் சங்கத்தால் கடும் ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது. 

தேர்தல் காலத்தில் இவ்வாறான அரசியல் நியமனங்கள் வழங்கப்பட முடியாது எனவும் இவை சுகாதார சேவையில் உள்ள சேவை தகுதிமூப்பு அடிப்படையிலான நியமன விதிமுறைகளுக்கும் பொதுசேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கும்  முற்றிலும் முரணானது  எனவும் ,அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக மேற்படி முறையற்ற நியமங்களை மீளப்பெறாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதோடு மட்டுமல்லாமல்  தேர்தல் ஆணைக்குழுவினை நாடி மேற்படி முறையற்ற அரசியல் நியமங்களை மீளப்பெற வேண்டிவரும் என சுகாதார அமைச்சிடம்  அரச மருத்துவர் சங்கத்தால் கூறப்பட்டதை அடுத்து மேற்படி முறையற்ற அரசியல் நியமனங்கள் சுகாதார அமைச்சால் இன்று 16-10-2019 இரத்துச் செய்யப்பட்டது

நியனமங்கள் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து தங்கள் பதவிக்காலத்தை 24 மணி நேரத்துக்குள் வரையறுத்துக் கொண்டு  வைத்திய கலாநிதி ஜீ .சுகுணன்  அவர்களும் வைத்திய கலாநிதி ஐ. எம் . ஜவாஹீர் அவர்களும்வைத்திய கலாநிதி எஸ் . ஆர் . ஷகீலா இஸடீன்  அவர்களும் தங்கள் பழைய பதவிகளுக்கு  மீளத்திரும்பினர்.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார துறையில்  அதிகரித்து அரசியல் தலையீடுகள் காரணமாக பாரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.52

Author: theneeweb