வாழ்வைஎழுதுதல் 01 பலருக்கு இலக்கியஅடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும்

 

வெள்ளீய அச்சுஎழுத்துக்களில் மலர்ந்து, கணினியுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

 

முருகபூபதி

 

அவரைமுதல்முதலில்நான்சந்தித்தஇடம்யாழ்ப்பாணம்ஸ்ரான்லிகல்லூரி.அங்குநான்கற்றவேளையில்அதன்பெயர்கனகரத்தினம்மத்தியகல்லூரிஎனமாற்றம்கண்டது.

நீர்கொழும்பிலிருந்துஆறாம்தரபுலமைப்பரிசில்பெற்றுஅக்கல்லூரிஆண்கள்விடுதியில்தங்கியிருந்துபடித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள்எங்கள்விடுதியின்சார்பில்அவரைஅழைத்து,  கல்லூரியின்பிரதானமண்டபத்தில்மேடையேற்றிபேசவைத்தார்கள்.

ஒருதுவிச்சக்கரவண்டியில் ந்துபேசினார்.  வெள்ளைநிறத்தில்வேட்டியும் நேஷனலும் அணிந்திருந்தார். எனக்கு யாழ்ப்பாணம் அப்போது புதியது. அங்குதான் முதல்முதலில் அவரையும் பனைமரத்தையும்பார்த்தேன்.

எனக்குத்தெரியாதசங்கானைசாதிக்கலவரம்பற்றியும்ஆப்ரகாம்லிங்கன்பற்றியும்அவர்அன்றுபேசியதுமாத்திரமேஇன்றும்நினைவில்தங்கியிருக்கிறது.

அந்தவருடம்1963.

அவர்அன்றுசொன்னசாதிவேற்றுமைசமூகஏற்றத்தாழ்வுஎன்பனபற்றியபுரிதல்அக்காலத்திலேயேஅந்தக்கல்லூரிஅமைந்திருந்தஅரியாலைப்பிரதேசத்தில்நேரடியாகஎனக்குகிட்டியது.  எந்தவொருசொந்தபந்தங்களும்இல்லாதிருந்தஅந்தப்பிரதேசவாழ்க்கைஎனக்கு,  எனதுபூர்வீகஊர்மீதும்வீட்டின்மீதும்ஏக்கத்தையேவளர்த்தது. என்னுடன்படித்தஎனதுமாமாமகன்முருகானந்தனுக்கும்தனதுகுடும்பத்தைவிட்டுவந்தஏக்கமிருந்தது. 1965இல்அங்கிருந்துவிடைபெற்றுஒருநாள்இரவுபுறப்படும்தபால்ரயிலில்கொழும்புவந்துஎங்கள்ஊர்திரும்பிவிட்டோம்.

அதன்பின்னர்1975ஆம்ஆண்டுவரையில்யாழ்ப்பாணத்தையேநான்திரும்பிப்பார்க்கவில்லை. சுமார்பத்தாண்டுகளின்பின்னர்என்னையாழ்ப்பாணம்நோக்கிதிரும்பிப்பார்க்கவைத்தவர்தான்அவர்.

ஒருமாணவனாகஅங்குசென்றுதிரும்பியஎன்னைஒருபடைப்பிலக்கியவாதியாகமாற்றிமீண்டும்அங்குஅழைத்துஎனதுமுதல்கதைத்தொகுதிக்குயாழ். வீரசிங்கம்மண்டபத்தில்அறிமுகநிகழ்வுநடத்திபாராட்டியவர்தான்அவர்.

னதுவாழ்வின்திருப்பங்களுக்குபலர்காரணமாகஇருந்திருக்கிறார்கள். அவர்களில்குறிப்பிடத்தகுந்தஒருவர்தான்அவர். 1971 ஆம்ஆண்டுவேலைதேடும்படலத்திலிருந்தவேளையில்அவர்எங்கள்ஊருக்குவந்திருந்தார். எழுத்தாளர்நீர்கொழும்பூர்முத்துலிங்கம்வீட்டில்அவரைமீண்டும்சந்தித்தேன். அப்பொழுதும்அவர்தூயவெள்ளைவேட்டி, வெள்ளைநெஷனல்தான்அணிந்திருந்தார். அவர்பெரும்பாலும்விரும்பிஅணிந்தஆடைகள்தான்அவை. எவருக்கும்அவர்அந்தஆடையுடன்தோன்றியதுதான்நினைவிலிருக்கும்.

1971 ஆம்ஆண்டுமீண்டும்அவரைநான்சந்தித்தபோதுஅவர்மல்லிகைமாதஇதழின்ஆசிரியராகியிருந்தார். அதனைஅவர்1966  இல்ஆரம்பித்தவர்.  நான்மல்லிகையின்வாசகனாகமாறியிருந்தேன். நீர்கொழும்புகடற்கரையில்அவருடன்நீண்டநேரம்இலக்கியம்பேசியிருக்கின்றோம். அவ்வாறுபேசியபொழுதொன்றில்தான்மல்லிகைநீர்கொழும்புபிரதேசமலர்பற்றியயோசனைவந்தது.  1972 ஆம்ஆண்டுபெப்ரவரிமாதம்அந்தமலர்வெளிவந்தது.

அதற்குஅறிமுகநிகழ்வுநடத்துவதற்குஅங்கிருந்தஇந்துவாலிபர்சங்கத்தின்மண்டபத்தில்அனுமதிகேட்டபோதுகிடைக்கவில்லை. அதற்குஅவரதுஅரசியல்கொள்கை, அவரதுசமூகபின்புலம்காரணமாகஇருந்தன.  பின்னர்எங்கள்சூரியவீதிஇல்லத்திலேஅந்தஅறிமுகநிகழ்வுநடந்தது. நானேஅவருக்குமலர்மாலைஅணிவித்துவரவேற்றுப்பேசினேன்.

அந்தஇல்லம்எங்களதுபூர்வீகவசிப்பிடம். அவரதுபாதம்அங்குபதிவதற்குமுன்னரும்பின்னரும்பலகலை, இலக்கியஆளுமைகளின்பாதங்கள்பதிந்திருக்கின்றன.

எனதுமுதலாவதுசிறுகதையைஅவரதுமல்லிகையில்1972 ஜூலைமாதஇதழில்வெளியிட்டு, என்னைஎழுத்தாளனாகவெளியுலகிற்குஅறிமுகப்படுத்தியவர்அவர்.

அந்தகதைகக்குநான்கனவுஎனத்தலைப்பிட்டிருந்தேன். அவர்கனவுகள்ஆயிரம்எனமாற்றினார். அவர்எனக்குள்பலகனவுகளைவிதைத்தவர். அவற்றில்ஒன்று2000ஆம்ஆண்டுநாம்வெளியிட்டமல்லிகைஅவுஸ்திரேலியசிறப்புமலர்.

மற்றது2011 ஆம்ஆண்டுகொழும்பில்நான்குநாட்கள்நாம்நடத்தியசர்வதேசதமிழ்எழுத்தாளர்மாநாடு.

இவ்வாறுஅவர்எனக்குள்பலகனவுகளைவிதைத்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில்ஒவ்வொருமாதமும்மல்லிகைஅச்சாகிவெளியானதும்,  அவர்கொழும்புக்குபுறப்பட்டுவந்துவிடுவார். பெரும்பாலும்இரவுதபால்ரயிலில்தான்வந்துதிரும்புவார்.

வருவதற்குமுன்னர்எனக்குஒருதபால்அட்டையில்கடிதம்எழுதிஅனுப்பிவிடுவார். 1972 ஆம்ஆண்டுமுதல்1987ஆம்ஆண்டுஜனவரிவரையில்நான்அவரைமாதந்தோறும்சந்திப்பேன். இலக்கியகூட்டங்களுக்குபயணிப்போம்.  1987பெப்ரவரியில்நான்அவுஸ்திரேலியாவுக்குபுறப்படும்முன்னர்ஒருநாள்அவரையும்மேலும்சிலஇலக்கியநண்பர்களையும்வீட்டுக்குஅழைத்துமதியபோசனவிருந்துவழங்கினேன்.

எனதுபயணம்பற்றிதயங்கித்தயங்கிஅவரிடம்சொன்னபோது,  அவருக்குஅதிர்ச்சிவந்திருக்கவேண்டும். அன்றுஇரவுஅவர்நித்திரையின்றிதவித்துப்போனதாகபின்னர்எனக்குஎழுதியகடிதத்தில்சொல்லியிருந்தார்.

அவரதுமல்லிகைப்பந்தல்வெளியீடாகவந்தஎனதுபாட்டிசொன்னகதைகள்நூலின்பதிப்புரையிலும்தனக்குநேர்ந்தமனவலியைப்பற்றிபதிவுசெய்திருந்தார்.

இலங்கையில்முதல்முதலில்தமிழுக்குசாகித்தியவிருதுகிடைத்ததேஅவர்எழுதியதண்ணீரும்கண்ணீரும்கதைத்தொகுதிக்குத்தான்.  அவர்அந்தவிருதைவாங்கிக்கொண்டுயாழ்ப்பாணத்திற்குரயிலில்திரும்பியபோதுஅன்றையயாழ்நகரமேயர்துரைராஜாவின்தலைமையில்பெரியவரவேற்பும்நடந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில்நடந்ததேர்தல்ஒன்றிலும்அவர்போட்டியிட்டவர். இலங்கைஎங்கும்நடந்திருக்கும்அவர்சார்ந்தஅரசியல்கட்சியின்மாநாடுகளிலும்இலக்கியநிகழ்வுகளிலும்உற்சாகம்குன்றாமல்பங்கேற்றவர். சோவியத்தின்அழைப்பிலும்அங்குசென்றுவந்தார். ஐரோப்பாவில்நடந்தஇலக்கியசந்திப்பிலும்கலந்துகொண்டார்.

தமிழகத்திற்கும்பலதடவைகள்இலக்கியசுற்றுலாசென்றுதிரும்பினார். இலங்கையில்சாகித்தியரத்னா,மற்றும்தேசத்தின்கண்முதலானஉயரியவிருதுகளும்பெற்றார். கனடாஇலக்கியத்தோட்டத்தின்இயல்விருதும்பெற்றார்.  அவரதுசுயசரிதைதமிழிலும்ஆங்கிலத்திலும்வெளிவந்திருக்கின்றன.இலங்கைநாடாளுமன்றிலும்அவர்பற்றிப்பேசப்பட்டுHansardஇல்பதிவாகியிருக்கிறது.

நீண்டநெடுங்காலமாகநடத்தியதனதுமல்லிகையில்பலஇளம்தலைமுறைபடைப்பாளிகளைஅறிமுகப்படுத்திகளம்தந்துவளர்த்துவிட்டிருக்கிறார்.

மல்லிகையைமாதாந்தம்வெளியிட்டவாறேமல்லிகைப்பந்தல்என்றபெயரில்பதிப்பகம்அமைத்துபலநூல்களின்வரவுக்கும்வித்திட்டவர்.

1987இல்அவருக்குமணிவிழாவந்தபோதுநான்மெல்பனில்3 EAவானொலியில்அவரதுவாழ்வும்பணியும்குறித்துஉரைநிகழ்த்தியிருக்கின்றேன்.  அதுவேவெளிநாட்டில்நான்நிகழ்த்தியமுதலாவதுவானொலிஉரை.  இவ்வாறுஎனதுபலமுதல்விடயங்களுக்குஅவர்காரணமாகஇருந்திருக்கிறார்.

வருடன்பலதடவைஇலக்கியசர்ச்சையிலும்ஈடுபட்டிருக்கின்றேன்.  அவர்மேடையில்பேசும்போதுநெற்றிநரம்புகள்புடைக்கும். தர்மாவேசத்துடன்பேசுவார்.

அவருக்கெனதனித்துவமானதிமிரும்இருந்தது. யாழ்ப்பாணத்தில்அவரதுஇல்லம், யாழ். ரயில்நிலையத்திற்குஅருகில்அமைந்திருக்கிறது. தினமும்காலைஎழுந்ததும்தனதுதுவிச்சக்கரவண்டியில்புறப்பட்டுஅவர்வந்துசேரும்முதல்இடம்யாழ். பஸ்நிலையத்தில்அமைந்துள்ளபிரபலமானபூபாலசிங்கம்புத்தகசாலைதான்.  அதன்நிறுவனர்( அமரர் ) பூபாலசிங்கமும்அவரதுநெருங்கியதோழர்தான். பின்னாளில்அதன்அதிபராகதிகழும்பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்கும்அவரதுஉற்றநண்பர்தான். அவர்களுக்கிடையிலானபந்தம்சாசுவதமானது. நீடித்துநிலைத்திருப்பது.

ஒருநாள்காலைஅவர்வழக்கம்போன்றுபூபாலசிங்கம்புத்தகசாலைவாசலில்நின்றுபத்திரிகைபடித்துக்கொண்டிருந்தார்.

அந்தத்தெருவுக்குமறுபக்கம்ஒருகாரில்அமர்ந்திருந்தஒருகனவான், கார்கண்ணாடியைஇறக்கியவாறு, அவரைநோக்கி,   “  உஷ்… உஷ்…. “என்றுசொல்லிசைகையினால்செல்லப்பிராணியைஅழைப்பதுபோன்றுதனதுகாருக்குஅருகில்வருமாறுஅழைத்துள்ளார்.

இதனைஅவதானித்தஅவருக்குகோபம்வந்திருக்கவேண்டும்.  உடனே,  நின்றஇடத்திலிருந்தே,   “   உஷ்… உஷ்…   “எனதிருப்பிச்சொல்லி,  தான்நிற்கும்இடத்திற்குஅந்தக்கனவானைவரவழைத்தார்.

அதனைஎதிர்பார்க்காதஅந்தக்கனவானும்காரைவிட்டுஇறங்கிவந்து,  தான்அழைத்தகாரணத்தைசொன்னார். “ எனதுமகள்பல்கலைக்கழகத்தில்படிக்கிறாள். அவள்தனதுபட்டப்படிப்பிற்காகஆய்வுசெய்வதற்குமல்லிகைஇதழ்கள்தேவைப்படுகின்றன.  “ என்றார்.

“ ராஜாதியேட்டருக்குஅருகிலிருக்கும்ஒழுங்கையில்மல்லிகைகாரியாலயம்இருக்கிறது. உங்கள்மகளைஅங்குஅழைத்துவந்துதேவையானதைதெரிவுசெய்யலாம். இவ்வாறுதெருவில்உமதுகாரிலிருந்துகொண்டு,   “  நாயைஅழைப்பதுபோன்றுஉஷ்….உஷ்…எனகத்தவேண்டாம். “  எனச்சொல்லிவிட்டு, மீண்டும்படித்துக்கொண்டிருந்தபத்திரிகையில்அவர்மூழ்கினார்.

யாழ்ப்பாணம்மத்தியகல்லூரிக்குஅருகில்அவர்தனதுதுவிச்சக்கரவண்டியில்அம்மாதத்திற்குரியமல்லிகைஇதழ்களுடன்ஒருநாள்வந்துகொண்டிருந்தார். அந்தஇதழின்முகப்பில்சிங்களஇலக்கியமேதைமார்டின்விக்கிரமசிங்காவின்படம்அச்சகியிருந்ததுடன், அவ்விதழில்அந்தமேதைபற்றியகட்டுரையும்பிரசுரமாகியிருந்தது.

தனித்தமிழ்ஈழகனவுடன்காசிஆனந்தனுக்குதங்கள்கையைக்கீறிஇரத்தத்திலகம்வைக்கும்கலாசாரம்மேலோங்கியிருந்தகாலப்பகுதி.

ஒருதமிழ்க்கொழுந்துஅவர்முன்னால்தோன்றி, துவிச்சக்கரவண்யைநிறுத்தி,   “    நீங்கள்தானேமல்லிகைஆசிரியர்.?எனக்குஒருமல்லிகைதாருங்கள்.  “ என்றது.

அவர்அதன்விலையைச்சொன்னார்.

ந்ததமிழ்க்கொழுந்துஅதற்குரியபணத்தைகொடுத்துமல்லிகையைவாங்கியது.  அதிலிருந்தஅட்டைப்படத்தைகாண்பித்து,   “ இதுயார்…?   “ எனக்கேட்டது.

“  ஒருபிரபலஎழுத்தாளர். பெயர்மார்டின்விக்கிரமசிங்கா.  “  என்றார்அவர்.

உடனே, அந்ததமிழ்த்தீவிரக்கொழுந்து,   “ இந்தஆள்சிங்களவன்தானே.  நீர்தமிழன்தானே… எதற்குஇந்தஆட்களுடையபடத்தைபோடுகிறீர். நீர்ஒருதமிழ்த்துரோகி  “எனச்சொல்லியவாறு, அந்தமல்லிகைஇதழைகிழித்துதுவம்சம்செய்துஅவரதுமுகத்தில்விட்டெறிந்துவிட்டுச்சென்றது.  கிழிபட்டுகீழேவிழுந்தமல்லிகைஇதழைபொறுக்கிஎடுத்துக்கொண்டுதனதுபயணத்தைஅவர்தொடர்ந்தார்.

அதன்பின்னரும்தெருவெங்கும்சென்றுமல்லிகையைவிநியோகித்தார்.

காலம்மாறியது.  அய்ரோப்பாவில்புகலிடம்பெற்றுள்ளஈழத்தமிழ்கலைஇலக்கியவாதிகள்தங்களதுவருடாந்தஇலக்கியச்சந்திப்பிற்காகஅவரைஅழைத்துபாரிஸ்மாநகரில்பாராட்டியது.

அவர்தனதுஏற்புரையைநீண்டநேரம்நிகழ்த்தியபின்னர்சபையிலிருந்தஅனைவரும்எழுந்துநின்றுசிலநிமிடங்கள்தொடர்ச்சியாககரகோஷம்எழுப்பி, அவரதுஉழைப்புக்குமரியாதைசெலுத்தினர்.

அச்சந்தர்ப்பத்தில்நிகழ்ச்சிமுடிந்ததும்அவர்முன்னால்தோன்றியஒருவர்,   “ அய்யாவணக்கம். என்னைஉங்களுக்குநினைவிருக்கிறதா?  நான்தான்பலவருடங்களுக்குமுன்னர்உங்களைதெருவில்மறித்துநிறுத்தி, உங்கள்மல்லிகைஇதழைகிழித்துப்போட்டவன். தமிழ்த்தீவிரம்பேசியநான்இங்குஓடிவந்துவிட்டேன். ஆனால், நீங்கள்இன்னமும்எங்கும்ஓடிச்சென்றுவிடாமல்அங்கிருந்துதமிழையும்இலக்கியத்தையும்வளர்க்கிறீர்கள். என்னைமன்னியுங்கள்அய்யா  “என்றார்.

அதனைசாதாரணமாகஎடுத்துக்கொண்டஅவர், அந்தமுன்னாள்தமிழ்க்கொழுந்தின்தோளைத்தடவி ,   “ எப்படிசுகமாகஇருக்கிறீரா? “எனக்கேட்டார்.

யாழ்ப்பாணத்தில்புத்தகங்கள்பத்திரிகைகள்விற்கும்ஒருகடைக்குமாதாந்தம்பத்துமல்லிகைபிரதிகளைவிற்பனைக்காகஅவர்கொடுப்பார். அந்தக்கடையில்தமிழகஇதழ்கள்கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள், கல்கண்டுஎன்பனதொங்கும். ஆனால்அவற்றுக்குமத்தியில்அவரதுமல்லிகையைகாணமுடியாது.

அடுத்தமாதம்புதியமல்லிகையுடன்அவர்அங்குசெல்வார்,  மேசைக்குஅடியிலிருந்துமுதல்மாதமல்லிகைஇதழ்பத்துப்பிரதிகளையும்அந்தக்கடைமுதலாளிபத்திரப்படுத்திஎடுத்துக்கொடுப்பார். எதுவும்விற்பனையாகியிராது. தொடர்ந்துஅவர்அவ்வாறுசிலமாதங்கள்ஏமாற்றப்பட்டுஅவமானப்படுத்தப்பட்டார்.

ஒருநாள்அவருக்குதர்மாவேசம்வந்துவிட்டது,   “ அய்யா,  நாளைநீங்கள்இறந்துபோனால், தமிழ்நாட்டிலிருந்துகல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள், கல்கண்டுஆசிரியர்கள்வரப்போவதில்லை. யாழ்ப்பாணத்திலிருக்கும்நான்தான்வருவேன். “  எனச்சொல்லிவிட்டுஅந்தக்கடைக்காரர்பத்திரப்படுத்திதிருப்பிக்கொடுத்தமல்லிகைபிரதிகளுடன்திரும்பினார்.

அதன்பின்னர்அவர்அந்தக்கடைக்குமல்லிகையைவிநியோகிக்கவில்லை.

இன்றுஅந்தக்கடையும்அதன்முதலாளியும்அங்கில்லை.  அவரும்அங்கில்லை. விமர்சனத்துக்குரியஅரசியல்அழுத்தங்கள்அவருக்குவந்தன. தமிழ்க்கொழுந்துகள்துப்பாக்கித்தீக்கொழுந்துகளாகமாறியிருந்தசூழலில்அவர்இலங்கைத்தலைநகரத்தில்புகலிடம்பெற்றார்.  மல்லிகையைதொடர்ந்தும்வெளியிட்டார்.

நான்குதசாப்தகாலத்திற்கும்மேல்மல்லிகைவந்தது. ஒருகட்டத்தில்அவரால்அதனைதொடர்ந்துநடத்தமுடியாமல்போனது.  கொழும்பில்புறநகரத்தில்அவர்ஒதுங்கியிருந்துநனவிடைதோய்ந்தார். அவருக்குபிறந்ததினம்வரும்வேளையில்( ஜூன் 27 ஆம்திகதி) கலைஇலக்கியநண்பர்கள்அவர்வதிவிடம்சென்றுவாழ்த்திஎளிமையாககொண்டாடுவார்கள்..

நானும்இலங்கைசெல்லும்சந்தர்ப்பங்களில்அவரைக்காணச்செல்வேன். அவர்படிப்படியாகநினைவுகளைமறந்துகொண்டிருப்பதுஅறிந்துஇம்முறைஇலங்கைப்பயணத்திலும்அவரைப்பார்ப்பதற்காகசென்றிருந்தேன். அதற்குமுன்னர்எனக்குகிடைத்தசெய்திஅதிர்ச்சியானது. வலிநிரம்பியது.

அவருக்குஒரேஒருஏகபுதல்வன்திலீபன்.இவரையும்இவரதுகுழந்தைப்பருவத்திலிருந்துநன்குஅறிவேன். கொழும்புஆமர்வீதியிலிருக்கும்திலீபனின்பிரபல்யமானஸ்ரூடியோவுக்குமுதலில்சென்று,  “அப்பாவின்சுகம்எப்படி?  “ எனக்கேட்டபோதுதான்அந்தஅதிர்ச்சியானசெய்தியையும்அறிந்தேன்.

திலீபனின்செல்வமகளின்கணவர்கடந்தஏப்ரில்மாதம்21 ஆம்திகதிஉயிர்த்தஞாயிறுதினத்தன்றுகொச்சிக்கடைஅந்தோனியார்கோயிலில்நடந்தபேரனர்த்தத்தில்கொல்லப்பட்டுவிட்டார்.

தனதுமகன்திலீபனின்மருமகனின்மறைவும்தெரியாமல்அவர்அமைதியாகஅந்தவதிவிடத்தில்இருக்கிறார்.  சிலமாதங்களுக்குமுன்னர்அவரதுமனைவிபுஸ்பராணியும்யாழ்ப்பாணத்தில்மறைந்துவிட்டார். அந்தச்செய்தியும்அவருக்குத்தெரியநியாயம்இல்லை.

அவரதுபவளவிழாக்காலத்தில்( 2001இல்  )அவரதுவாழ்வையும்பணிகளையும்சித்திரித்துஎனதுநினைவுகளுடன்ஒருநூலைவெளியிட்டேன். அதனைஅவரதுமனைவிபுஸ்பராணிக்கும்புதல்விகள்சுவர்ணலதா, பிரேமலதா, புதல்வன்திலீபனுக்கும்தான்சமர்ப்பணம்செய்திருந்தேன்.

இன்றுஇந்தத்தகவல்களும்இந்தப்பத்தியின்தொடக்கத்தில்எழுதியிருந்தகதைகளும்அவருக்குநினைவில்இருக்குமா ?  என்பதுதெரியாது!.

அவருக்குஇந்தஆண்டுஜூன்மாதம்27 ஆம்திகதி93வயதுபிறக்கிறது.  நண்பர்பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்குடன்அவரைப்பார்ப்பதற்காகஅவருக்குப்பிடித்தமானவாழைப்பழமும்வாங்கிச்சென்றேன்.

அவரதுமருமகளும்உறவினர்களும்எம்மைப்பார்த்துவிட்டு,   “உங்களைஅவருக்குநினைவிருக்குமோதெரியாது… எதற்கும்அவரைஅழைக்கின்றோம்  “ என்றுஉரத்துகுரல்எழுப்பினர். சிலநிமிடங்களுக்குப்பின்னர்அந்தவீட்டின்பக்கத்துஅறையிலிருந்துஅவர்வெளிப்பட்டார்.

நான்எழுந்துஅவர்அருகேசென்றேன். அவரதுமுகம்மலர்ந்துபிரகாசமாகியது. விரைந்துவந்துஎனதுநெஞ்சில்ஓங்கிஒருஅறைதந்து,  “  எங்கடநீர்கொழும்புமுருகபூபதி  “ என்றுஉரத்துச்சத்தமிட்டுஎன்னைஆரத்தழுவிக்கொண்டார்.

இதில்கவனிக்கவேண்டியது. நான்கடந்த32 வருடங்களுக்கும்மேலாகஅவுஸ்திரேலியாகண்டத்தில்வாழ்கின்றேன். முன்னர்அவரைப்பார்க்கச்செல்லும்போது   “எப்போதுஒஸ்ரேலியாவிலிருந்துவந்தீர்..?  “ என்றுதான்அவர்கேட்பார். இம்முறைஎங்கள்ஊரைத்தான்அவர்சொன்னார். அவருக்குநீர்கொழும்புதான்நினைவிலிருக்கிறது.

அதுபோன்றுஅவரதுநீண்டகாலநண்பர்பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்அவர்அருகில்வந்ததும்அடையாளம்கண்டு  “எங்கட ஶ்ரீதரசிங்“  எனச்சொல்லிஅணைத்துக்கொண்டார்.

எம்மருகில்அமர்ந்துசிலநிமிடங்கள்எம்மையேபார்த்துக்கொண்டிருந்தார். வேறுஎதுவும்பேசவில்லை. சற்றுநேரத்தில், ஒருகுழந்தையைப்போன்று, எனதுகாதருகில்,                           “ நித்திரைவருகிறது. தூங்கப்போகின்றேன்  “எனச்சொல்லியவாறுஎழுந்துசென்றார்.

அவரதுவாழ்வைமேற்சொன்னபலஏராளமானசெய்திகளுடன்எழுதிக்கொண்டேஇருக்கலாம். அவைஎழுதித்தீராப்பக்கங்கள்.ஆனால், அவையெல்லாம்அவருக்குநினைவிலிருக்குமா?  வலிநிரம்பியகனத்தமனதுடன்அவர்பற்றியபசுமையானநினைவுகளைசுமந்தவாறுஅந்தவீட்டிலிருந்துபுறப்பட்டோம்.

அவரதுவாழ்வுதொடர்ந்தும்பலரால்எழுதப்படும். அந்தப்பதிவுகளில்ஈழத்துகலைஇலக்கியவரலாறும்இழையோடியிருக்கும். தனக்குப்பின்னரும்மல்லிகைவரும்எனச்சொன்னவர்அவர்.

அவரதுகனவையார்நனவாக்குவார்கள்?

—-0—

Author: theneeweb