5 கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இந்தவாரம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுசெயலாளர், சீ.வி. விக்னேஷ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க நினைப்பது தவறு என்றும், அவ்வாறான தீர்மானங்கள் எதனையும் தாங்கள் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்றும் விக்னேஷ்வரன் கூறினார்.

தற்போது ஐந்து கட்சிகள் இணைந்து, வேட்பாளர்களிடம் கூட்டாக முன்வைப்பதற்கான கோரிக்கை பத்திரம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்த வாரம் ரணிலுடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்பதோடு, ஏனைய வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் இந்த கோரிக்கை பத்திரத்துக்கு யாரும் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில், அதன் பின்னர் அடுத்தக்கட்டத்தைப்பற்றி யோசிப்பதாகவும், எனினும் தேர்தல் புறக்கணிப்பு பிழையானது என்றும் விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்கூட்டம் எதிர்வரும் 23’ம் அல்லது 24’ம் திகதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தங்களுக்கு இடையில் ஆராயப்படும் என, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

Author: theneeweb